சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தினமும் 5000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும். ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  இந்நிலையில் வைகாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. வரும் 19ம் தேதி வரை 5 நாட்கள் நடை திறந்திருக்கும். 19ம் தேதி இரவு நடை சாத்தப்படும். இதற்கிடையே கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் இந்த மாதம் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஏற்கனவே அறிவித்துள்ளது.

Related Stories:

>