சாத்தான்குளம் வழக்கில் ஆய்வாளர் ஜாமீன் மனு சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ்

புதுடெல்லி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனுவுக்கு, சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் (ஜெயராஜ், பென்னிக்ஸ்) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த தர் தனது உடல்நலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த உத்தரவிற்கு எதிராக தர் தரப்பில் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

 அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து,‘‘இந்த வழக்கை பொருத்தமட்டில் தர் மீதான எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லாமல், கடந்த ஒன்பது மாதங்களாக அவர்  சிறையில் உள்ளார். அவர் வெளியில் இருப்பதால் கண்டிப்பாக வழக்கின் சாட்சியங்களை கலைக்க மாட்டார். தருக்கு முதுகெலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. அதனால் இவை அனைத்தையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என தெரிவித்தார். வாதங்களை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் தமிழக டி.ஜி.பி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி நேற்று உத்தரவிட்டனர்.

Related Stories: