அசாமில் மின்னல் தாக்கி 18 யானைகள் பரிதாப பலி

நகோன்: அசாம் மாநிலத்தில் மின்னல் தாக்கி ஒரே இடத்தில் 18 யானைகள் பலியான சம்பவம் நடந்துள்ளது. அசாம் மாநிலத்தின் நகோன் மாவட்டத்திற்கு உட்பட்ட கதியாடோலி காட்டுப்பகுதியில் நேற்று காலை 18 யானைகள் ஒரே இடத்தில் இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போது, மின்னல் தாக்கி 18 யானைளும் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதற்கு முன் மேற்கு வங்கத்தில் 5 யானைகள் மின்னல் தாக்கி ஒரே இடத்தில் இறந்துள்ளன. ஆனால் 18 யானைகள் இறப்பது இதுவே முதல் முறை என வன அதிகாரிகள் கூறி உள்ளனர். யானைகளுக்கு பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உண்மையான காரணம் தெரியவரும்.

Related Stories:

>