வெவ்வேறு தடுப்பூசி போட்டால் என்னவாகும்? ஆக்ஸ்போர்டு ஆய்வில் தகவல்

லண்டன்: வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை மாறி மாறி போட்டுக் கொண்டால் உடல் சோர்வு, தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும் என ஆக்ஸ்போர்டு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போதைய நிலையில், முதலில் போடும் அதே டோஸ் தடுப்பூசியையே 2வது டோசும் போட வேண்டுமென அனைத்து நிறுவனங்களும் அறிவுறுத்தி உள்ளன. ஆனால், இரு நிறுவன தடுப்பூசிகளை மாறி மாறி பயன்படுத்தினால், தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளிக்கலாம் என்பதால் அதற்கான ஆய்வுகள் நடக்கின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்த முதற்கட்ட ஆய்வின் தகவல்கள் லான்செட் மருத்துவ இதழில் இடம் பெற்றுள்ளன.

அஸ்ட்ரஜெனிகா, பைசர் இரு தடுப்பூசிகளை போட்டு சிலருக்கு பரிசோதித்துள்ளனர். அதில் 10 சதவீதம் பேருக்கு கடுமையான உடல் சோர்வு, தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 3 சதவீதம் பேருக்கு லேசான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக இரு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டால் அது எந்த அளவுக்கு வைரசை எதிர்த்து செயல்படும் என்பதற்கான ஆய்வு நடந்து வருகிறது.

Related Stories:

>