எரிமலை குழம்பு சூட்டில் தயாரிக்கும் அசத்தல் பீட்சா

கவுதமாலா:  மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் பக்காயா எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை கடந்த 2013ம் ஆண்டு முதல் வெடித்து சிதறி வருகின்றது.  கணக்காளரான டேவிட்  கார்சியா இந்த லாவா குழம்புகளின் சூட்டில் பீட்சா செய்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றார். கடந்த 2013ம் ஆண்டு முதல் இதுபோன்று பீட்சாவை செய்து வருகிறார். இதற்காக 1800 பாரன்ஹீட்டை தாங்கும்  சிறப்பு உலோக தகட்டை பயன்படுத்துகிறார். மேலும் வெப்பம் தன்னை தாக்காமல் இருக்கும் வகையில் பிரத்யேக பாதுகாப்பு கவசத்தையும் அணிந்து கொள்கிறார். 14 நிமிடத்தில் பீட்சாவை இவர் தயாரித்து விடுகிறார். இந்த பீட்சாவை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விரும்பி உண்கின்றனர். எரிமலைக்கு அருகே மலையடிவாரத்தின் சிறிய குகைகளில் பீட்சா தயாரிப்பதை டேவிட் கார்சியா வாடிக்கையாக கொண்டுள்ளார்.

Related Stories: