லாரிகளுக்கு காலாண்டு வரி செலுத்த சலுகை

சென்னை: தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் அளித்த மனு: மே 10ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் ஓடக்கூடிய பொருள் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் கட்டுமான வாகனங்களுக்கு அசம்பாவிதமாக பழுது ஏற்பட்டதால், அதனை சரி செய்யும் வகையில் பழுது பார்க்கும் கடைகள் (மெக்கானிக் ஷெட், பஞ்சர் போடும் கடை) திறந்து வைக்க சில தளர்வுகளுடன் அனுமதி வழங்க வேண்டும். காலாண்டு வரி) கட்ட கடைசி தேதி மே 15ம் தேதி என்பதை, அரசு சலுகை வழங்கி கால நீட்டிப்பு செய்ய வேண்டும்.

Related Stories:

>