‘உங்கள் தொகுதி முதலமைச்சர்’ மனுக்களுக்கு தீர்வு காண துறை வாரியாக தொடர்பு அலுவலர் நியமனம்: சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்டங்களில் தனிப்பிரிவு: தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு

சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவு: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசாரம் நடத்தினார். அப்போது, மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக போடும் வகையில் பெட்டி ஒன்றை பிரச்சாரத்தில் வைத்தார். இந்த பிரச்சாரத்தின் போது மு.க.ஸ்டாலின், இந்த பெட்டியில் போடப்படும் மனுக்களை அந்தெந்த துறையிடம் ஒப்படைத்து 100 நாட்களில் குறைகள் தீர்க்கப்படும். இதற்காக தனித்துறைகள் உருவாக்கப்படும் என்று அவர் மக்களிடம் உறுதியளித்தார். மாநிலம் முழுவதும் 8 லட்சம் மனுக்களை மக்களிடம் இருந்து பெறப்பட்டன. சட்டமன்ற திமுக தனிப்பெரும்பான்ைமயுடன் அமோக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி பொறுப்பேற்று கொண்டார். இதை தொடர்ந்து அவர் உடனடியாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, புதிதாக உருவாக்கப்பட்ட இந்த துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க பணியாளர்கள் மற்றும் நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமை செயலாளர்  இறையன்பு வெளியிட்டுள்ள உத்த ரவில் கூறியிருப்பதாவது: முதல்வர் தனிப்பிரிவில் இயங்கி வரும் பிரிவுகளில் ஒரு பிரிவை ( பிரிவு அலுவலர் , உதவி பிரிவு அலுவலர்கள் , உதவியாளர்கள் , தட்டச்சர்கள் ) உங்கள் தொகுதியில் முதல்வர் துறையோடு இணைந்து பணியாற்ற பணிக்கப்படுகிறது. தனிச்செயலாளர்கள், நேர்முக உதவியாளர், பதிவுரு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பொது நிர்வாக துறையின் மூலம் நிரப்பப்பட வேண்டும் . முதல்வர் தேர்தல் பரப்புரையில்” உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ” என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையில் பரிசீலிக்க ஏதுவாக , தமிழ்நாடு அரசு மின் ஆளுமை முகமையில் (TN-ega) இயங்கிவரும் முதல்வரின் உதவி மைய குழுவினை ( CM-Helpline ) பயன்படுத்திக்கொண்டு அனைத்து மனுக்களையும் பதிவேற்றம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க பணிக்கப்படுகிறது

அதற்கான நிதி ஆதாரம் தமிழ்நாடு அரசு மின் ஆளுமை முகமையின் கருத்துரு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளவும் பணிக்கப்படுகிறது Gkft மனுக்களின் மீதான நடவடிக்கை/ தீர்வு முதலமைச்சரின் தனிப்பிரிவு கண்காணிக்க பணிக்கப்படுகிறது அனைத்து அரசு துறை தலைமை அலுவலகங்களிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை மூலம் பெறப்படும் மனுக்களின்மீது எடுக்கப்படும் நடவடிக்கைதீர்வு குறித்து கண்காணித்திட ஒரு தொடர்பு அலுவலரை கூடுதல் பொறுப்பில் நியமனம் செய்ய ஆணையிடப்படுகிறது அனைத்து மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயங்கும் அலுவலரைக்கொண்டு தனிப்பிரிவை ஏற்படுத்தி மனுக்களின் மீதான நடவடிக்கையினை கண்காணித்திட மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிடப்படுகிறது.

Related Stories:

>