×

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: ஐசிஎம்ஆர் தலைவர் அறிவுறுத்தல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள 718 மாவட்டங்களில் 4ல் 3 பங்கு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 10%க்கு அதிகமாக உள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். குறிப்பாக தலைநகர் பகுதிகளான டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொற்றின் பரவல் வேகம் அதிகமாக உள்ளதாக பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.

10%க்கும் மேல் தொற்று பாதிப்பு உள்ள மாவட்டங்களில் பாதிப்பு 5%ஆக குறையும் வரை முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்ராம் பார்கவா அழுத்தமாக கூறியுள்ளார். அதற்கு 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கை நீட்டிப்பதே சிறந்த தீர்வாக இருக்கும் ஆனால் அதையும் உறுதியாக கூற முடியாது என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கடும் பாதிப்பை சந்தித்த டெல்லியில் பாதிப்பு சதவீதம் 35 லிருந்து 17 ஆக குறைந்துள்ள போதிலும் தற்போதுள்ள சூழலில் ஊரடங்கை விலக்கினால் அது பேரழிவாக அமைந்துவிடும் என எச்சரித்துள்ளார். ஏப்ரல் 15 ஆம் தேதியே பாதிப்பு 10%ஆக உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கிற்கு அரசு வலியுறுத்தியதாகவும் ஆனால் மத்திய அரசு முழு ஊரடங்கு என்பது கடைசி தீர்வாகவே இருக்கும் என கூறிவிட்டதாகவும் பல்ராம் பார்கவா வேதனை தெரிவித்துள்ளார்.



Tags : India ,ICMR , ICMR
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...