சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி இல்லை - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: தமிழகத்தில் உழவர் சந்தைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் செம்மொழி பூங்காவில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரும் ஆண்டில் 120 புதிய உழவர் சந்தைகள் தொடங்கப்படும் என்றும் கூறினார்.

கடந்த ஆட்சியில் நூற்றுக்கணக்கான உழவர் சந்தைகள் பராமரிக்கப்படவில்லை என்று அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் 8 வழிச்சாலை திட்டம் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் திமுகவின் திட்டத்தில் மாற்றம் இல்லை என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Related Stories:

>