கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்: சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்வீட்டரில் பதிவு

சென்னை: சென்னையில் அவரது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நேற்று நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். ஐதராபாத் மாநிலத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை வந்தடைந்தார். வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் ஒரு வாரம் தனிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. ஆகவே இன்றைய தினம் அவருக்கு வீட்டிலேயே முதற்கட்ட தடுப்பூசி போடப்பட்டது. 

அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இதை அவரது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாம் ஒன்றாக இணைந்து இந்த கொரோனாக்கான போராட்டத்தில் வென்று எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைராக பரவி வருகிறது. தற்போது கொரோனா அதிகம் பரவி வருவதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி மக்கள் அனைவரும் போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்ற விதமாக பல வழிப்புணர்வுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

Related Stories:

>