சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ள அவசர ஊர்தி திட்டத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபுணர் பாராட்டு

சென்னை: கொரோனா சிகிச்சை மையங்களுக்கு நோயாளிகளை கொண்டு செல்ல சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ள அவசர ஊர்தி திட்டத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபுணர் பிரப்தீப் கவுர் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் 108 ஆம்புலன்ஸிற்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் லேசான அறிகுறி கொண்டவர்கள் மருத்துவமனை அல்லது கொரோனா சிகிச்சை மையங்களுக்கு கொண்டு சிறப்பு மருத்துவ ஊர்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் வசதி கொண்ட 250 கார்களை சிறப்பு அவசர ஊர்தியாக பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 50 அவசர ஊர்திகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த சிறப்பு வாகனம் மூலம் நோயாளிகளை விரைவாக மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல முடியும். சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள இந்த திட்டத்திற்கு ஐசிஎம்ஆர் மருத்துவ நிபுணர் பிரப்தீப் கவுர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுபற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சிறப்பான நடவடிக்கை என்று கூறியுள்ளார். ஆம்புலன்ஸை மட்டும் நம்பி இருக்காமல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்பு அவசர ஊர்தி திட்டம் உயிர்காக்கும் நடவடிக்கை என்று அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>