மதுரையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த தனியார் மருத்துவமனை ஊழியர் கைது

மதுரை: மதுரையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த தனியார் மருத்துவமனை ஊழியர்  இர்பான் கான் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.  கொரோனாவால் இறந்தவர்களின் மருந்து சீட்டை பயன்படுத்தி ரெம்டெசிவர் மருந்து வாங்கி கள்ள சந்தையில் விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது. மேலும் கைது செய்யப்பட்ட இர்பானுக்கும் மருத்துவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தனியார் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கினால் தான் அவர்களது உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த மருந்து வாங்குவதற்கு 5 இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள். மேலும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த தடுப்பு மருந்தை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

Related Stories:

>