இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கும் திட்டம் துவக்கம்

ஊட்டி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஊட்டி அரசு மருத்துவமனையிலும் நோயாளி உடன் இருப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. நாடு முழுவதும் கொேரானாவால் மக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதனை கட்டுப்பாடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் செயல்படுவதில்லை. இந்நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தற்போது இத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஊட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி டீன் மனோகரி தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் முத்துராமன், ராஜேஷ், அர்ச்சகர்கள் சரவணன், ராஜேஷ்வரி, நகர துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

ஊட்டி நகர திமுக செயலாளர் ஜார்ஜ் பொதுமக்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். இதில், நோயாளிகளின் உறவினர்கள் பலருக்கும் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கார்டன் கிருஷ்ணன், புஷ்பராஜ், மஞ்சுகுமார், காந்தல் சம்பத், பேட்டரி செல்வா, ஸ்டேன்லி, ரஞ்சித், தயாகு, மணி, பாபு, கிருஷ்ணன், நௌசத் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: