ரோஜா பூங்காவில் பூத்துள்ள அரிய வகை பச்சை ரோஜா

ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்காவில் அரிய வகை பச்சை ரோஜா பூத்துள்ளது.ஊட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் வகைகளை கொண்ட 40 ஆயிரம் ரோஜா செடிகள் உள்ளன. நாட்டு வகைளை சேர்ந்த ரோஜா செடிகள், வனங்களில் காணப்படும் ரோஜா செடிகள் அதிகளவு வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஏராளமான மினியேச்சர் வகையை சேர்ந்த ரோஜா செடிகளும் காணப்படுகிறது.

இதில், ஒன்று பச்சை நிற ரோஜா. அரிய வகையான இந்த ரோஜா ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரோஜா மலர்கள் பசும் இலைகளை போன்றே காட்சியளிக்கும். எளிதாக இந்த பச்சை நிற ரோஜா மலர்கணை காண முடியாது. இந்நிலையில், ரோஜா பூங்காவில் தற்போது பூத்துள்ளது. சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதியில்லாத நிலையில், இதனை யாரும் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: