கொரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி

சென்னை: கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கமாறு முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து, அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களால் முடிந்த நிதியை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்த நன்கொடையாக வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாக திமுக அறக்கட்டளை தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை சமாளிக்கும் விதமாக பலர் பொருள் உதவியும், நிதி உதவியும் செய்து வருகின்றனர். 

Related Stories:

>