கே.வி.குப்பம் அருகே பசுவிடம் ஆடுகள் பால் குடிக்கும் அதிசயம்

கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அருகே பசுவிடம் ஆடுகள் பால் குடிக்கும் அதிசயம் நடந்தது. வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த வடவிரிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஜீவரத்தினம், விவசாயி. இவர் தனக்கு சொந்தமாக 5க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ஜீவரத்தினம் வளர்த்து வந்த  ஆடு ஒன்று 4 குட்டிகள் போட்டுள்ளது.  இந்நிலையில், 4 ஆட்டு குட்டிகளும்  பசுவிடம் பால் குடித்து வருகிறது. இந்த நிகழ்வு காண்போரை வியப்படைய செய்கிறது.

Related Stories:

>