சாலையோரம் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி: சாலையோரத்தில் உள்ள பட்டுபோன மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாலைகளின் இருபுறமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புளிய மரங்கள் உள்ளன. இவை 80 ஆண்டுகள் பழமையானவை என்பதால், பல மரங்கள் பட்டுப்போய் காய்ந்துள்ளன. பலத்த காற்று வீசும் போது, பட்டுப்போன மரங்கள் வேரோடு சாய்ந்து, விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் ஆனந்த நகர் அருகில், சாலையோரம் உள்ள புளியமரம் ஒன்று பட்டுப்போய் காய்ந்து, கரையான் அரித்து உள்ளது. தற்போது அடிக்கடி சூறாவளிக் காற்று வீசுவதால், இந்த மரம் எந்த நேரத்திலும் சாலையில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதம் நிகழும் முன்பாக, இந்த மரத்தை உடனே அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: