×

மருத்துவ தகுதி கொண்ட மத்திய அரசு ஊழியர்கள் மருத்துவ பணி செய்ய மத்திய அரசு ஒப்புதல்: நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: மருத்துவ தகுதி கொண்ட மத்திய அரசு ஊழியர்களும் மருத்துவ பணி அல்லது நோயாளிகளுக்கு ஆன்லைன் மூலமான மருத்துவ ஆலோசனை வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த அனுமதி உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வரலாறு காணாத கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் அரசில் கிடைக்கும் உள்திறன்களை பயன்படுத்தி தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் வேண்டியதை கருத்தில் கொண்டு, எந்த வகையிலான மருத்துவ தகுதியை கொண்டிருக்கும் மத்திய அரசு ஊழியர்களும் மருத்துவ பணி செய்யவோ அல்லது ஆன்லைன் ஆலோசனைகள் (டெலிகன்சல்டேசன்ஸ்) வழங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. 


இதற்காக மேற்படி ஊழியர்கள் தங்கள் துறைத்தலைவர்களின் அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை என மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மருத்துவ பணி அல்லது மருத்துவ ஆலோசனைகளை தங்கள் பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் ஓய்வு நேரங்களில் மட்டுமே செய்ய வேண்டும், அதுவும் முற்றிலும் தொண்டு அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. Tags : Ministry of Health , Medical, Federal Government, Staff, Medical Work
× RELATED ஜூனில் 12 கோடி டோஸ் தடுப்பூசி கிடைக்கும்: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்