மதுரையில் ரெம்டெசிவிரை வாங்க 5-வது நாளாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: கள்ளச்சந்தையில் விற்பதாக புகார்

மதுரை: மதுரையில் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க வெளியூர்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மதுரையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் ஒப்பந்த பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயிர் காக்கும் மருந்தாக கருதப்படும் ரெம்டெசிவிர் மருந்து சென்னையை தொடர்ந்து தற்போது  மதுரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று டோக்கன் வழங்காததால் 15 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஏமாற்றத்துடன் மக்கள் வீடு திரும்பினர். 

ஒரு டோக்கனுக்கு 4 குப்பிகள் என்ற அறிவிப்பினை எதிர்த்து மக்கள் போராடிய பின் 6 குப்பிகள் வழங்கப்படுகின்றன. 75லிருந்து 85 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் வருவதால் டோக்கன் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளனர். ரெம்டெசிவிரை வாங்க 5-வது நாளாக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தினமும் மருத்தவமனைக்கு வந்து மருந்து வாங்காமல் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.  

Related Stories: