கொரோனாவால் உயிரிழந்த போலீசாருக்கு கமிஷனர் அஞ்சலி

சென்னை: செம்பியம் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் அருள் கொரோனாவால் கடந்த 6ம் தேதி உயிரிழந்தார். அதேபோல், வில்லிவாக்கம் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பாலாஜி கடந்த 7ம் தேதி உயிரிழந்தார்.

இதேபோல், சிட்லப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு ஏட்டு  சுரேஷ்குமார் கடந்த 1ம் தேதி உயிரிழந்தார். நேற்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் சிட்லப்பாக்கம், செம்பியம், வில்லிவாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு நேரில் சென்று  அங்கு வைக்கப்பட்டிருந்த காவலர்கள் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories:

>