×

மின்சாரம் பாய்ந்து பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.9.70 லட்சம் இழப்பீடு: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: பாடியநல்லூர் பவானிநகர் பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் அப்பகுதியை சேர்ந்த ராஜவேலு என்பவரின் மனைவி காவேரி மின்சாரம் பாய்ந்து பலியானார். 2019ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகையில்  வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

அதே பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மாடு ஒன்று உயிரிழந்ததாகவும், இதுசம்பந்தமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு புகாரளித்தும், பலவீனமான மின் கம்பியை மாற்றாததால் இந்த விபத்து நடந்துள்ளது.  எனவே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த குமரேசன் என்பவர் புகார் அளித்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன்  காவேரியின் கணவர் ராஜவேலுவுக்கு ₹9. 70 லட்சம் வழங்க வேண்டும் உத்தரவிட்டார்.


Tags : Human Rights Commission , 9.70 lakh compensation to the family of the woman who was electrocuted: Human Rights Commission order
× RELATED வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த...