நர்சுகள் காலில் விழுந்து கண்ணீர் விட்ட கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன்: ‘நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள்’ என நெகிழ்ச்சி

கோவை: கோவையில் நர்சுகள் காலில் விழுந்து, ‘‘நீங்கள்தான் இப்போதைய சூழலில் கடவுள்’ என டீன் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூரில், உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அதிகம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவையின் முக்கிய கொரோனா சிகிச்சை மையமாக இந்த மருத்துவமனை உள்ளது. இங்கு, செவிலியர் தினம் நேற்று நடந்தது. இதில், ஏராளமான நர்சுகள் பங்கேற்றனர். இவர்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, செவிலியர் தினத்தை கொண்டாடினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவமனை டீன் ரவீந்திரன் உணர்ச்சிபெருக்குடன் நர்சுகள் காலில் விழுந்தார். ‘‘இப்போதைய சூழ்நிலையில் நீங்கள்தான் கடவுள்’’ என கூறி கண்ணீர்விட்டு நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Related Stories:

>