கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி டாக்டர்களுக்கு அழைப்பு: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் 3 மாதம் பணியாற்ற பயிற்சி மருத்துவர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள பயிற்சி மருத்துவர்கள் 3 மாத காலத்திற்கு  ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பம் உள்ள  தகுதி வாய்ந்த இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள் தங்களது அசல்  சான்றிதழ்களை இன்று பிற்பகல் 2 மணிக்குள் gccteledoctor2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 91-044-25619330 என்ற தொலைபேசி எண்ணுக்கு  தொடர்பு கொள்ளலாம்.

மேலும், 300 பயிற்சி மருத்துவர்கள் நிரப்பப்படுகின்றனர். கல்வித் தகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில்  இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் மாத ஊதியம் ₹40 ஆயிரம் வழங்கப்படும். மேற்கண்ட பதவி முற்றிலும்  தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். மின்னஞ்சல் மூலமாக பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பயிற்சி  மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவர். மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இன்று தொலைபேசி மூலமாக நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள் 14ம் தேதி (நாளை) முதல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில் பணிபுரிய வேண்டும்.

சுயவிவரம், இறுதி ஆண்டுக்கு முந்தைய ஆண்டிற்கான மதிப்பெண் சான்றிதழ், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண், கல்லூரி அடையாள அட்டை ஆகியவற்றை இறுதி ஆண்டு மாணவர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: