×

செய்யூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., கொரோனாவுக்கு பலி

சென்னை: செய்யூர் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், இலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளருமானவர் இராஜி (63). பவுஞ்சூர் வெங்கட்டா நகர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு, கடந்த ஒரு  வார காலமாக  உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான வேட்டைக்காரகுப்பத்தில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

Tags : Seyyur ,AIADMK ,MLA ,Corona , Seyyur constituency AIADMK ex-MLA killed in Corona
× RELATED 27 பேருக்கு கொரோனா அதிமுக மாஜி எம்எல்ஏ ஆயில் மில்லுக்கு சீல்