அரசு மருத்துவமனையில் 12,468 ஆக்சிஜனுடன் கூடிய கூடுதல் படுக்கை அமைக்க முடிவு: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை:  தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் அலையை காட்டிலும் 2வது அலையில்  கொரோனா பரவல் பல மடங்கு உள்ளது. அதிலும், தற்போது ெகாரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலோனோருக்கு உடனடியாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலால் அனுமதிக்கப்படும் நிலை தான் உள்ளது. இதனால்,  மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் அதிகம் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 இதை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் பொதுப்பணித்துறைக்கு கூடுதலாக படுக்கை  வசதிகள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு கடிதம் எழுதியது. தற்போது, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 41 ஆயிரம் படுக்கைகள் உள்ளது. இதில், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 22 ஆயிரம்   படுக்கைகள் மட்டும் உள்ளது. இந்த நிலையில் கூடுதலாக ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 12468 படுக்கை வசதிகள் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை மாநிலம் முழுவதும் ஆக்சிஜன் வசதிகள் கூடிய 5 ஆயிரம் படுக்கைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, கூடுதலாக படுக்கை வசதிகள் அமைக்கும் பணியில் ஒப்பந்த நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது. இப்பணிகளை  இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிக்க பொதுப்பணித்துறைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கொரோனா பாதிப்புள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், ேகாவை, தூத்துக்குடி, நெல்லை உட்பட 14 மாவட்டங்களில் கூடுதல் கவனம் எடுத்து அங்கு  எவ்வளவு படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்த முடியுமோ அந்த மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: