×

சில்லி பாய்ன்ட்...

* ஐசிசி நேற்று வெளியிட்ட டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆர்.அஷ்வின் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில்  ஜடேஜா 3வது, அஷ்வின் 4வது இடங்களில் நீடிக்கின்றனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராத்(5), ரிஷப்(6), ரோகித்(8) அதே இடங்களில் தொடர்கின்றனர்.
* இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் மேரி கோம், லவ்லினா ஆகியோர் நேற்று கொரோனா முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
* ‘கொரோனா அறிகுறிகள் இருந்தும் முதல் 2 முறை சோதனையில் ‘நெகட்டிவ்’ என்று வந்தது. 3வது சோதனையில் தான் ‘பாஸிட்டிவ்’ என்று காட்டியது’ என்று கிரிக்கெட் வீரர் விருத்திமான் சாகா தெரிவித்துள்ளார்.
* ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ‘ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

Tags : Roulette Point...
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...