பீகார், உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து ம.பி. ஆற்றில் மிதக்கும் சடலங்கள்

போபால்: பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து வந்த நிலையில், தற்போது மத்தியப்பிரதேசத்தில் ருன்ஜ் ஆற்றிலும் சடலங்கள் மிதக்க தொடங்கி இருக்கின்றது. பீகார் மாநிலத்தின் பக்சர் மாவட்டத்தில் கடந்த திங்களன்று கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்தது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொரோனாவால் இறந்த சடலங்களை தகனம் செய்வதற்கு இடங்கள் இல்லாதது, கொரோனா தொற்று பரவும் என்ற அச்சம் காரணமாக ஆற்றில் தூக்கி எறியப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அங்கு 71 சடலங்கள் மிதந்தது. அவற்றை உள்ளாட்சி நிர்வாகத்தின் அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே உத்தரப்பிரதேசத்தில் காஜிபூர் மாவட்டத்தில் 25 சடலஙங்கள் மிதந்தது. இதுமட்டுமின்றி, உபி, பீகார் எல்லையில் மேம்பாலத்தில் இருந்தபடி ஆம்புலன்ஸ் டிரைவர் கொரோனா சடலங்களை ஆற்று மணலில் வீசி சென்ற சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தி. இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது மத்தியப்பிரதேசத்தி ருன்ஞ் ஆற்றில் சடலங்கள் மிதக்கத்தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

பான்னா மாவட்டத்தில் கென் ஆற்றின் துணை ஆறான நான்கைந்து சடலங்கள் மிதந்துள்ளது. இந்த ஆற்றினை கிராம மக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. ஆற்றில் சடலங்கள் மிதந்ததால் இவை கொரோனா சடலங்களாக இருக்கக்கூடும் என்றும் கிராமத்தில் கொரோனா பரவக்கூடும் என்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக கலெக்டர் சஞ்சய் குமார் மிஸ்ரா கூறுகையில், “ இரண்டு சடலங்கள் மட்டுமே ஆற்றில் அடித்து வரப்பட்டு இருந்தது. இதில் ஒருவர் கிராமத்தை சேர்ந்த 95வயது முதியவர், மற்றொருவர் கேன்சர் நோயாளி. இருவரும் நந்தன்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள். இரு சடலங்களும் மீட்கப்பட்டு பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது” என்றார்.

* மத்திய அமைச்சரிடம் முறையீடு

கங்கையில் சடலம் மிதக்கும் விவகாரம் தொடர்பாக பீகார், உத்தரப்பிரதேச மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில், பீகார் அமைச்சர் சஞ்சய் ஜா மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு டிவிட்டரில் அனுப்பிய கோரிக்கையில், ‘‘நீங்களே பாருங்கள் சடலங்கள் எங்கிருந்து வருகின்றன என்று. எந்த விசாரணைக்கும் பீகார் அரசு ஒத்துழைப்பு அளிக்கும்’ என உத்தரப்பிரதேச அரசு மீது புகார் கூறி உள்ளார்.

* மாறி மாறி புகார்

உத்தரப்பிரதேசம், பீகாரில் மொத்தம் 100க்கும் மேற்பட்ட சடலங்கள் கங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து கங்கையில் போடப்பட்டிருப்பதாக பீகார் அதிகாரிகளும், பீகாரில் போடப்பட்டவை என உத்தரப்பிரதேச அதிகாரிகளும் மாறி மாறி புகார் கூறுகின்றனர்.

Related Stories: