கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் கோவாக்சின் நிறுவனத்தில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணிபுரியும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. மத்திய அரசுக்கு மட்டுமே தடுப்பூசிகளை வழங்கிய நிலையில் மே 1ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாடு, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை நேரடியாக விநியோகிக்க தொடங்கியுள்ளது.

இத்தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனர் சுசித்ரா இல்லா , கடந்த 10ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார். எனினும் தங்கள் நோக்கம் குறித்து சில மாநிலங்கள் புகார் கூறுவது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தங்களது ஊழியர்கள் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விடுமுறையில் உள்ளதாகவும் எனினும் மக்களுக்காக இரவு பகல் பாராமல் தாங்கள் பணியாற்றி வருவதாகவும் சுசித்ரா இல்லா கூறியுள்ளார்.

Related Stories: