கொரோனா சோகங்களுக்கு மத்தியில் எது எப்படியோ எங்களுக்கு அழகுதான் முக்கியம்! முகக் கவசத்தில் கலக்கும் உத்தரகாண்ட் பெண்கள்

டேராடூன்: உத்தரகாண்டில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள், தாங்கள் அணிந்திருந்த முகக் கவசத்தில் அழகிய அணிகலன்களை அணிந்து கொண்டு கலக்கினர். கொரோனா காலத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் சிறை வைக்கப்படாலும் கூட, கட்டுபாடுகளுடன் கூடிய திருமணம் போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் உள்ளன. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில பெண்கள், எந்தவொரு நல்ல காரியத்திற்கு சென்றாலும் ‘நாத்னி’ என்ற அணிகலன்களை அணிவது வழக்கம். திருமண நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு அழகான பெண்ணும், ‘நாத்னி’ அணிகலன் அணிந்திருப்பதைக் காண முடியும். அந்த வகையில், கொரோனா காலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் கூட, ‘நாத்னி’ அணியும் புதிய பேஷனை பெண்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது, மூக்கு வளையம், நாதனி போன்ற அணிகலன்களை திருமண பேஷன் முகக் கவசத்துடன் இணைத்து, தங்களை அலங்கரித்து கொண்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில், பெண்கள் தங்களது முகக்கவசத்துடன் சேர்த்து ‘நாத்னி’ அணிகலனை அணிந்திருந்தனர். மேலும், நெக்லஸ், மாங் டிக்கா, காதணிகள், மூக்குத்தி போன்ற நகைகளையும் முகக்கவசத்தின் மேற்பகுதியில் அலங்கரித்துள்ளனர். இவ்வாறு அணிந்திருக்கும் பெண்களை பலரும் ரசித்தனர். வித்தியாசமான அலங்காரங்களை பார்த்து, பலரும் அந்த பெண்களை பாராட்டினர்.

இதுகுறித்து திருமணத்தில் கலந்து கொண்ட கவிதா ஜோஷி கூறுகையில், ‘கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டியிருந்தது. எங்கள் குடும்ப வழக்கப்படி பெண்கள் திருமண வைபவத்தில் பங்கேற்கும் அழகான ஆடைகளை அணிய வேண்டும். அதில், நாத்னி என்ற அணிகலன் முக்கியமானது. முகக் கவசம் அணிய வேண்டும் என்று கூறியதால், நாத்னியை அணிய முடியாத சூழல் ஏற்பட்டது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு, முகக் கவசத்தின் மீது நாத்னியை அணிய முடிவு செய்தோம். அதற்காக, புதுபுது டிசைன்களில் முகக்கவசத்தின் மீது அணிகலன்களை பொருத்திக் கொண்டு திருமண விஷேசத்தில் பங்கேற்றோம்’ என்றார்.

Related Stories: