ஸ்ரீரங்கம் கோயில் ஐயர் நியமனம் தொடர்பான அறிவிப்பு: ரத்து செய்து கோயில் இணை ஆணையர் உத்தரவு

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் ஐயர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அறிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் 51-வது ஐயர் நியமனம் தொடர்பாக கோயில் வலைதளத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் கோயில் நிர்வாகம் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் 51-வது ஐயர் பட்டத்திற்காக காலியாக உள்ள பதவிக்கு, தகுதி உடையவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இதுவரை வழக்கமாக கோயில் நிர்வாகம் மூலமாக தான் ஐயர் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோயில் வலைதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில்  நிர்வாக காரணங்களுக்காக அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயில் ஐயர் நியமன விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் நியமனம் தொடர்பான அறிவிப்பை கோயில் இணை ஆணையர் ரத்து செய்துள்ளார்.

Related Stories:

>