இங்கிலாந்து புறப்படும் முன் கொரோனா பாதித்தால் அணியில் இடம் இல்லை: பிசிசிஐ அதிரடி

மும்பை: ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட இந்திய அணி வரும் 2ம்தேதி லண்டன் புறப்படுகிறது. இந்த அணியில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள். 18 நாட்கள் தனிமை இந்த தொடருக்காக, இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பு, வரும் மே 25 முதல் இந்திய வீரர்கள் அனைவரும் பயோ-பபுளில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அவர்கள் 8 நாட்கள் கடுமையாக தனிமைப்படுத்தப்பட உள்ளார்கள். இந்த தனிமைப்படுத்துதலின் போது 3 நாள் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். லண்டன் சென்றதும் இந்திய வீரர்கள் மேலும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த நிலையில், இந்திய வீரர்களில் எவருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர் இந்த இங்கிலாந்து தொடரை மறந்துவிட வேண்டியது தான் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ செய்தி குறிப்பில், வீரர்கள் மும்பைக்கு வரும் வரை தங்களை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும், ஒருவேளை மும்பையில் நடத்தப்படும் சோதனையில் யாருக்கேனும் கொரோனா உறுதி செய்யப்பட்டால், அவருக்கு என்று தனி விமானம் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட மாட்டாது. அவர்கள் தங்களுடைய இங்கிலாந்து பயணம் முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணிக் கொள்ளலாம். கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்கு இங்கிலாந்தில் இருக்கும் அளவுக்கு லாங் சீரிஸ் என்பதால், வீரர்கள் தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படும். மேலும் இங்கிலாந்துபுறப்படும் முன் வீரர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசியும் போட்டிருக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>