×

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் பார்வை இழப்பு, மூளை பாதிப்பை தடுக்க மருந்து தயாரிக்க மத்திய அரசு ஆணை

டெல்லி : மியூகோர்மைகோசிஸ் என்ற கண் மற்றும் மூளையில் ஏற்படும் பூஞ்சைப் பாதிப்பை தடுக்க மருந்து தயாரிக்க ஆணையிடப்பட்டுள்ளது. கொரோனாவால் மீண்ட சிலர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் கண் பார்வையை இழந்துள்ளனர். அதாவது கொரோனாவால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டு ஐசியூவில் சிகிச்சை பெறுவர்களுக்கு ஸ்டீராய்டு எனும் அதிக சக்தி வாய்ந்த மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இதனால் கொரோனாவிலிருந்து வெளியே வருகின்றனர். ஆனால் அதன்பின்னர் இரு வாரங்களில் அவர்கள் கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் சர்க்கரை அளவை இந்த பூஞ்சை அதிகரிப்பதாகவும் இதனால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டில் ஒருவர் உயிரிழப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டீராய்டு அதிகளவில் செலுத்தப்படுவதால் உடலில் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் கண் வலி, கண் வீக்கம், பார்வை இழப்பு ஏற்படும். பாதிப்பு அதிகரிக்கும் போது மூளையையும் பாதிக்கும். ஆரம்ப கட்டத்தில் கன்னம், கண் பகுதிகளில் வலி ஏற்படும், மூக்கிலிருந்து ரத்தம் ஏற்படும் அப்போதே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.இல்லையேல் மூக்கில் பிரச்சினை ஏற்படும், சைனஸ் பிரச்சினை ஏற்படும். ரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். அடைப்பு ஏற்படும் பகுதிகளில் உறுப்புகள் செயலிழக்கும் என்று மருத்துவர் ராயப்பா கூறியுள்ளார். இது புதிய நோய் கிடையாது. சிலருக்கு இந்த பூஞ்சை தொற்று இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எதுவும் செய்வதில்லை.இந்த நிலையில், மியூகோர்மைகோசிஸ் பாதிப்பை குணப்படுத்தும் அம்ஃபோ டெரிசின்பி மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

Tags : மியூகோர்மைகோசிஸ்
× RELATED மக்களவை தேர்தலில் கூட்டணி...