முழு ஊரடங்கால் ஆட்களின்றி பொய்கை மாட்டுச்சந்தை வெறிச்சோடியது

வேலூர் : முழு ஊரடங்கு காரணமாக பொய்கை மாட்டுச்சந்தைக்கு யாரும் வராததால் வெறிச்சோடியது.வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை தமிழகத்தின் வடமாவட்டங்களில் மிகப்பெரிய கால்நடை சந்தையாகும். இங்கு கறவை மாடுகள், உழவு மாடுகள், காளைகள், எருதுகள், ஆடுகள், கோழி என கால்நடைகளுடன், அவற்றுக்கு தேவையான பொருட்களும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் குவிந்துவிடும்.

அத்துடன் அதை சார்ந்த காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய வாரச்சந்தையும் களைக்கட்டும்.இதனால் பொய்கை மாட்டுச்சந்தையில் சாதாரணமாக ₹3 முதல் ₹5 கோடி வரை வர்த்தகம் நடக்கும். கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் தொடர்ந்து நீடித்து வந்த ஊரடங்கு காலத்தில் பொய்கை மாட்டுச்சந்தை அதன் வரலாற்றிலேயே முதன்முறையாக முடங்கியது. அதையடுத்து தற்போது நேற்று முன்தினம் தொடங்கி வரும் 24ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக நேற்று நடக்கவிருந்த பொய்கை மாட்டுச்சந்தை நடக்கவில்லை.

இதனால் சந்தை நடக்கும் மைதானம் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories:

>