கேரட் விலை கடும் வீழ்ச்சி

குன்னூர் : ஊரடங்கு நேரத்திலும் குன்னூரில் வழக்கம்போல் செயல்பட்டு வரும் கேரட் அறுவடை, விலை குறைவால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகளான கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெள்ளை பூண்டு போன்றவை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இதில் கேரட் அதிக பரப்பளவில் பயிரிட்டுள்ளனர்.‌

இங்கு சாகுபடி செய்யப்படும் கேரட் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்களூர், கேரளா போன்ற வெளி மாநில பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. நள்ளிரவில் கேரட் அறுவடையில் ஈடுபட்டு அதிகாலையில் விற்பனைக்கு அனுப்பி வந்தனர்.

தற்போது ஊரடங்கு போடப்பட்டு அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் கேரட் அறுவடை பணிகள் வழக்கம்போல செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் அதிகாலையில் தோட்டங்களுக்கு சென்று கேரட் அறுவடை செய்து அதனை இயந்திரங்கள் மூலம் சுத்திகரிப்பு செய்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். மேட்டுப்பாளையம் மார்க்கெட் கடைகளில் கேரட் விலை கிலோ 20 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

Related Stories:

>