×

டிஆர்டிஓவின் பவுடர் வடிவில் கொரோனாவுக்கு மருந்து : ஆரோக்கியமான செல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை

டெல்லி :மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation) தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து குறித்து மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஐயங்களை எழுப்பி உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2 டிஆக்ஸி டி- குளுகோஸ் (2-deoxy-D-glucose (2-DG) என்ற மருந்தின் பார்முலாவுடன் கோவிட் எதிர்ப்பு மருந்தினை ரெடிஸ் லேப் நிறுவனத்துடன் இணைந்து DRDO தயாரித்து இருக்கிறது. இந்த மருந்துகளின் கட்டுப்பாட்டு மூலக்கூறு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுவதுடன் ஆக்சிஜன் சார்பு நிலையை குறைகிறது என்பதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து அவசர கால தேவைக்காக இந்த மருந்தினை பயன்படுத்த டிசிஜிஏ எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் மருந்தின் செயல்பாடுகள் குறித்து தற்போது வரை முழுமையான தரவுகள் வெளியிடப்படவில்லை என்று தனியார் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். மனிதர்கள் மீதும் நடத்தப்பட்ட சோதனையில் மருந்தின் திறன் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் போதுமானதாக இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதே கவலையை உள்ளடக்கிய புற்றுநோய் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துக்கு முன்னர் அனுமதி மறுக்கப்பட்டதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். டிஆக்ஸி டி- குளுகோஸ் (2-deoxy-D-glucose (2-DG) மருந்து மனித உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


Tags : பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு
× RELATED மக்களவை தேர்தலில் காலை 11 மணி...