இறக்கத்தில் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,000-க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.80 குறைந்தது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை அதிகரித்தால், மறுநாள் விலை குறைவதுமான நிலையும் இருந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.56 குறைந்தது. இதைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,500க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.36,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையின் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.30 குறைந்து ரூ.75.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அட்சய திருதி, ரமலான் பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறைந்து வரும் தங்க்தின் விலையால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. ஊரடங்கு காலம் என்பதால் கடைகள் முழுவதும் மூடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: