தமிழக சட்டப்பேரவை தலைவராக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பதவியேற்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தலைவராக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பதவி ஏற்றுக்கொண்டார். சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டதை தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட 223 பேர் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர். பேரவைத் தலைவராக மு.அப்பாவு, துணைத் தலைவராக கு.பிச்சாண்டி ஆகியோரைத் தவிர யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர்கள் போட்டியின்றி தேர்வாகினர். 

எதிர்க்கட்சித் தலைவர் பழனி சாமி, சட்டப்பேரவையின் பாமக குழுத் தலைவர் ஜி.கே.மணி, பாஜக குழுத் தலை வர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேர வைத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள மு.அப்பாவு, சட்டப் பேரவை முன்னாள் தலைவர் ப.தனபால், முன்னாள் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் எம்எல்ஏக்களாக பதவி யேற்றனர். 

Related Stories: