நடிகர்களை காவு வாங்கும் கொரோனா தொற்று: திரைப்பட துணை நடிகர் மாறன் உயிரிழப்பு

செங்கல்பட்டு: தமிழ் திரைப்பட துணை நடிகர் மாறன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இவர் செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியில் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே அவர் தற்போது சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். ஆதிவாசி என்ற கேரக்டரில் அந்த படத்தில் நடித்த டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் . 

வில்லன் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், கானா பாடல்களையும் மேடை கச்சேரிகளில் பாடி வந்துள்ளார். கொரோனா தொற்றால் திரையுலகினர் அடுத்தடுத்து மரணம் அடைவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவரது இறப்பிற்கு பல நடிகர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   தற்போது கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் நடிகர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். 

Related Stories: