தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு உதவ தொலைபேசி வழி உதவி சேவை மையம்: அரசு அறிவிப்பு

சென்னை: தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு உதவ தொலைபேசி வழி உதவி சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோவிட் பெருந்தொற்று முழு ஊரடங்கு தொடர்பாக,  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 9ம் தேதி தலைமை செயலகத்தில் தொழில் சங்கத்தினர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில்,  இந்த முழு ஊரடங்கு காலகட்டத்தில் தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணிகள் ஆகியவை தொடர்ந்து செயல்படுவதில் ஏற்படும் இடர்பாடுகளை களையும்  பொருட்டு 24/7 தொலைபேசி வழி உதவி சேவை மையம் தொடங்க முதல்வர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் தொழில் துறை ஓர் உதவி சேவை மையத்தினை தொடங்கியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட  தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், சந்தேகங்கள் மற்றும் தேவையான உதவிகளுக்கு கீழ்க்கண்ட அலுவலர்களின் அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

அதிகாரிகள்

செல்போன் எண்கள்    

பால் அருண்    9962993497    

க்ரிஸ்டோ    9994339191    

ராகவ்    7823928262    

ராஜேஷ்    9629122906    

கௌரவ்    9962993496    

மகேஸ்வர்    9629633119    

பிரபாகரன்    9600720024    

ராஜவேல்    7823928263    

சுரேஷ்    9787426831    

சோழன்    9677107722

மேலும் இது தொடர்பாக covidsupport@investtn.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: