அனைத்து மக்களுக்குமான அரசாக இந்த அரசு இருக்கும்: வேல்முருகன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் ஒரு மாற்று அரசியலை ஏற்படுத்தக்கூடிய அனைத்து மக்களுக்கான அரசாக இந்த அரசு இருக்கும் என்று வேல்முருகன் கூறினார். தமிழக சட்டப் பேரைவை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் வெற்றி பெற்ற  எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். பேரவைக்கு வெளியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: மாணவர்களுக்கு எட்டாக் கனியாக மாற்றுகிற நீட் தேர்வை ரத்து செய்வதற்காக, முதல்வரிடம்  கூறிய கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசின் மூலம் அதை ரத்து செய்வதற்கான முயற்சியில் நானும் பங்காற்றுவேன். பேரறிவாளன் உள்ளிட்ட 7 ேபரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையிலும் தொடர்ந்து  வலியுறுத்துவேன். மேலும் தமிழ் சமூகத்தின் மீது திணித்த ஹைட்ரோ கார்பன் திட்டம், 8 வழிச்சாலை திட்டம் போன்ற மக்களின் வாழ்வுரிமை பிரச்னைகளில் கண்டிப்பாக எனது குரல் ஓங்கி ஒலிக்கும்.

இந்த கொரோனா காலத்தில் தமிழகம் மிகப் பெரிய ஒரு துயரத்தில் இருந்து கொண்டிருக்கிறது. இதை நீக்க முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து மு.க.ஸ்டாலின் இரவு பகல் பராமல் தூக்கமில்லாமல் கடுமையாக உழைத்து வருகிறார். அதன்  மூலம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். நேர்மையான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் நேர்மையான காவல் துறை உயர் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் ஒரு மாற்று அரசியலை  ஏற்படுத்தக்கூடிய அனைத்து மக்களுக்குமான அரசாக இந்த அரசு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: