எந்த சூழ்ச்சியும் என்னை வீழ்த்த முடியாது: கமல்ஹாசன் அறிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று விடுத்துள்ள அறிக்கை: நான் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில்,  என் சொந்த சம்பாத்தியத்தில் செலவு செய்த தொகை எனக்கு பெரிது. என்னுடன் களம்  கண்ட போட்டியாளர்கள் செலவை ஏணி வைத்தால் கூட அது எட்டாது. அப்படி இருந்தும், மும்முனை போட்டி இருந்த தொகுதியில், 33 விழுக்காடு மக்கள் மதித்து வாக்களித்துள்ளார்கள். இன்னும் 2 ஆயிரம் பேர் வாக்களித்திருந்தால், சரித்திரம்  சற்றே மாறியிருக்கும். இந்த நேரத்திலும், என் தலைவன் இருக்கின்றான். அவன் எங்களை வழிநடத்தியே தீருவான் என்று நம்பிக்கை கொள்ளும் கூட்டம் இருக்கும் வரையில், எந்த சூழ்ச்சியும் நம்மை வீழ்த்த முடியாது. தவறு செய்தவர்கள்  தாமே திருந்துவார்கள் என்று காத்திருப்பவன் நானல்ல. தவறு செய்தவர்களை திருத்தும் கடமையும், உரிமையும் உள்ள தலைவன். கடமை தவறினால் இங்கே காலம் தள்ள முடியாது என்பதை உணர்ந்தவர்கள், தாமே வேறு சந்தை தேடி  போய்விடுவர் என்பது கட்சி தொடங்கும்போதே எனக்கு தெரியும்.

Related Stories:

>