முதல்வரின் செயலாளர்கள் 4 பேருக்கு தலா 11 துறைகள் ஒதுக்கீடு: அரசு உத்தரவு

சென்னை: தமிழக முதல்வராக ஸ்டாலின்6ம் தேதி பொறுப்பேற்றார்.  இந்நிலையில் முதல்வரின் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோரை நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு துறை ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல்வரின செயலாளர் 1  உதயச்சந்திரனுக்கு பொதுத்துறை, விஜிலென்ஸ் கமிஷன், தகவல் தொழில்நுட்ப துறை, உள்துறை, பள்ளி கல்வி, உயர்கல்வி, சிறப்பு திட்ட செயலாக்கம், தொழில்துறை, திட்டம் மற்றும்  மேம்பாடு, அறநிலையத்துறை ஆகிய துறைகளும், முதல்வரின் செயலாளர் (2)  உமா நாத்துக்கு மின்சாரம், உணவுத்துறை, சிறப்பு முயற்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை, பொதுப்பணித்துறை  (கட்டுமானம்),

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகம், நீர்வளத்துறை, நிதி ஆகிய துறைகளும், முதல்வரின் செயலாளர் (3) எம்.எஸ்.சண்முகத்துக்கு மனிதவளம்,  கூட்டுறவு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி,  ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், தமிழ் மேம்பாடு மற்றும் தகவல், தொழிலாளர் நலத்துறை, சட்டப்பேரவை, வேளாண்துறை- உழவர் நலன், சட்டம், முதல்வர் அலுவலகத்தின் ஒட்டு மொத்த நிர்வாகம் ஆகிய துறைகளும், முதல்வரின்  செயலாளர்(4) அனுஜார்ஜ்ஜிடம் சுற்றுச்சூழல், பிற்படுத்தப்பட்டோர், சிறு,குறு தொழில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கால்நடை, பால்வளம், மீன்வளம், கைத்தறி, துணிநூல்,  டெக்ஸ்டைல்ஸ் மற்றும் காதி, சுற்றுலாத்துறை, சமூக மறுசீரமைப்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கீடு, பயண ஏற்பாடு உட்பட அரசு நெறிமுறைகளை கவனிப்பது உள்ளிட்டவைகளும் ஒதுக்கீடு செய்து  முதல்வரின் செயலாளர் I  உதயச்சந்திரன் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.

Related Stories: