தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லது செய்வார்: பாமக தலைவர் ஜி.கே.மணி நம்பிக்கை

சென்னை: தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஜி.ேக.மணி கூறினார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் அவைக்கு வெளியில் பாமக தலைவர் ஜி.கே.மணி  நிருபர்களிடம் கூறியதாவது:  அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றிருக்கிறது.  இந்த ஆட்சிக்கு ராமதாஸ் வாழ்த்துகளை  தெரிவித்துள்ளார். ஆகவே சட்டமன்ற பேரவையில் பாமக ஒரு பொறுப்புள்ள கட்சியாக செயல்படும். ஆட்சி பொறுப்பேற்று முதல் நாளில் 5 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அது வரவேற்கக்கூடிய அறிவிப்பாக பார்க்கிறோம்.  காவல்துறையில் தலையீடு இருக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பிக்கை இருக்கிறது.

நாட்டின் தேவைகளுக்கும், தமிழக மக்களுக்கு நல்ல செய்யும் நேரத்தில் பாமக வரவேற்கும். வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீட்டால் யாருக்கும் எந்த சமுதாயத்துக்கும் பாதிப்பில்லை. அனைத்து சமுதாயங்களுக்கும்  இடஒதுக்கீடு கிடைப்பதில் பாமக உறுதியாக உள்ளது. இனி வரகக் கூடிய கால கட்டத்தில் ெபாறுப்பேற்றுள்ள திமுக அரசு எல்லா சமுதாயத்துக்கும் உரிய இடஒதுக்கீட்டை பகிர்ந்து வழங்க வேண்டும். இந்த சட்டம் தற்காலிக சட்டம் கிடையாது.  நிரந்தரமானது. முதல்கட்டமான சட்டம். 6 மாதத்துக்குள் கணக்கெடுப்பு நடத்தி உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான்.   இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>