உலக செவிலியர்கள் தினம்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உலக செவிலியர்கள் தினத்தையொட்டி பல்ேவறு கட்சி தலைவர்கள், இயக்கங்களை சேர்ந்தவர்கள் செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மே 12 உலக செவிலியர் நாள். செவிலியர்  பணி என்பது தொழில் அல்ல, தொண்டு. ஊதியத்திற்கு அப்பாற்பட்டு, சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, தாய்க்கு நிகரான அன்பும் பரிவும் தன்மையும் கொண்டு, மனித அசிங்கங்களை கூட பொருட்படுத்தாமல் பொறுமையுடன் ஆற்றும்  அரும்பணி.முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்கும் முன்பே, 1212 செவிலியர்களை நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கி, அரசு ஆணை வெளியிட்டு, அவர்களின் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி இருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்புகூட எட்டு மாத கர்ப்பிணியான மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனாவுக்குப் பலியாகி இருக்கிறார். இத்தகைய தியாகிகளுக்கு, தமிழக அரசு, புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே. வாசன்: நோயாளிகளின், தாயாக, தமக்கையாக தன்னலம் கருதாமல் இரவு, பகல் பாராது, அயராது உழைக்கும் செவிலியர்களின் உயர்ந்த சேவைக்கும், உயர்விற்கும் என்றும் துணை நிற்போம் என்று கூறி, இந்நாளில்  அனைவருக்கும் “உலக செவிலியர் தின” வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Stories: