அதிமுக ஆட்சி காலத்தில் மணல் வழங்கும் முறையில் குளறுபடி 5 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிப்பு: 40 ஆயிரம் லாரிகளை விற்ற உரிமையாளர்கள் : கூட்டமைப்பு தலைவர் தகவல்

சென்னை:  தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த பொதுநல கூட்டமைப்பு தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாவது: தமிழகத்தில் 55  ஆயிரம் மணல் லாரிகள் இயங்கி வந்தன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணல்  வழங்கும் முறையில் பல்ேறு குளறுபடிகளை செய்ததால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கின்ற  நிலைமைக்கு அதிமுக ஆட்சியாளர்கள் கொண்டு சென்று விட்டனர். இந்த 55 ஆயிரம் லாரிகளுக்கும் அதன் உரிமையாளர்கள் அதனை  சார்ந்த தொழிலாளர்கள் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பிழைப்பிற்கு வழியின்றி மிக கேவலான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். 40 ஆயிரம் லாரிகள் விற்கப்பட்டது. தற்போது வெறும் 15 ஆயிரம் மணல் லாரிகள் தான் இயங்கி  வருகின்றன. மற்ற  லாரிகளை பைனான்சியரும், காயலான் கடைக்காரரும் எடுத்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டன.

புதிதாக பொறுப்பேற்று திமுக தலைமையிலான ஆட்சியின் சீரிய முயற்சியாலும் எங்கள் மீது பரிவு காட்டி ஆற்று மணல், கிராவல் மற்றும் சவுடு போன்ற கனிமங்களை தாங்கள் தேர்தல் அறிக்கையிலேயே வெளியிட்டபடி எங்களது லாரிகளுக்கு  வழங்கி இருண்டு போன்ற எங்களது வாழ்க்கையில் ஒளி விளக்கேற்ற வேண்டும்.  கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனாவால் எங்களது வாழ்வாதாரத்தை இழந்து எங்களது தொழிலும் குடும்பமும் நிர்கதியான நிலைக்கு வந்து விட்டத்தை  முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். எங்கள் மீது பரிவு காட்டி மீண்டும் எங்கள் தொழிலுக்கு புத்துயிரூட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: