மாட்டு சாண தெரபியால் ஆரோக்கியத்துக்கு ஆபத்து: மருத்துவர்கள் எச்சரிக்கை

அகமதாபாத்:  குஜராத்தின் அகமதாபாத்தில் ஸ்ரீஸ்வாமிநாராயண் குருகுல் விஷ்வவித்யா பிரதிஷ்தனம் என்ற பெயரில் கோசாலை இயங்கி வருகின்றது. இங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக, மாட்டு சாண தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.  இது கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு தருவதாகவும் நம்பப்படுகின்றது.  கடந்த ஒரு மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறும் சுமார் 15 பேர் இங்கு வந்து மாட்டுச்சாண தெரபி சிகிக்சை எடுத்துள்ளனர். இதில் உடல் முழுவதும் மாட்டு சாணம், கோமியம் தேய்ப்பது அதன் பின்னர் பால் மூலமாக அவை கழுவப்படுகின்றது. சில டாக்டர்கள் கூட இந்த தெரபியை எடுத்துக் கொள்ள வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மாட்டு சாண தெரபி கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு வழங்காது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து பொது சுகாதார இயக்குனர் திலீப் மாவ்லங்கார் கூறுகையில், “இந்த தெரபி கொரோனாவுக்கு எதிராக உதவுகிறதா என உண்மையில் எனக்கு தெரியவில்லை. மாட்டு சாணத்தை உடலில் பூசுவதால் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது  தொடர்பாக எந்த ஆராய்ச்சியோ, பரிந்துரையோ இதுவரை வரவில்லை” என்றார்.  இந்திய மருத்துவ சங்கத்தின் பெண்கள் பிரிவு தலைவர் தேசாய் கூறுகையில், ‘‘மாட்டு சாணம் என்பது கழிவு. மாட்டுசாணம், கோமியத்தை உடலில் பூசுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது மற்றும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்காது, ஆனால் மியூகோர்மைகோசிஸ் போன்ற இதர பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்” என எச்சரித்துள்ளார்.

Related Stories: