மேற்கு வங்கத்தில் 77 பாஜ எம்எல்ஏக்களுக்கு மத்திய படை பாதுகாப்பு

புதுடெல்லி:  மேற்கு வங்கத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 77 பாஜ எம்எல்ஏக்களுக்கும் மத்திய படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் பாஜ தொண்டர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக பாஜ எம்எல்ஏக்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். மேலும் மாநில அரசு மற்றும் போலீசார் தேர்தலுக்கு பின்னரான வன்முறையை தடுக்க தவறிவிட்டதாகவும் கூறப்பட்டது.  இதனடிப்படையில், மாநிலத்தில் பாஜ எம்எல்ஏக்களுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மேலும் தேர்தலில் தோல்வியடைந்த பாஜ வேட்பாளர்களுக்கு 15ம் தேதி வரை மத்திய போலீசார் பாதுகாப்பு வழங்கப்படும். அதன் பின்னர் அவர்களுக்கு வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த பாதுகாப்பு நீட்டிக்கப்படும். உள்துறை அமைச்சகமானது மாநில ஆளுநரிடம் இருந்து சட்டம், ஒழுங்கு தொடர்பான அறிக்கையை கேட்டுள்ளது.  மத்திய பாதுகாப்பு படையினரைக் கொண்ட எக்ஸ் பிரிவு என்பது மூன்று முதல் 5 ஆயுதமேந்திய வீரர்களின் 24 மணி நேர பாதுகாப்பு வழங்குவார்கள்.

Related Stories: