இங்கிலாந்திற்கு 50 லட்சம் தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரஜெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்திற்கு 50 லட்சம் டோஸ் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனம் அரசிடம் அனுமதி கோரியது. இதை மத்திய அரசு மறுத்து விட்டது. இந்த தடுப்பூசியை மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் விற்குமாறு அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த 50 லட்சம் டோஸ்களும் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட கிடைக்கும். இதை மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.  அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக சீரம் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தடுப்பூசியை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகமும் வலியுறுத்தி உள்ளது.

Related Stories: