அமெரிக்காவில் 12-15 வயது குழந்தைக்கு தடுப்பூசி போட அனுமதி

வாஷிங்டன்: கொரோனா உருமாற்ற வைரஸ்களால் குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக உலகின் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் முதியவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், 12-15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பைசர் தடுப்பூசி போடலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இது கொரோனாவுக்கு எதிரான போரில் நம்பிக்கை அளிக்கும் முன்னேற்றம் என அமெரிக்க அதிபர் பைடன் கூறி உள்ளார்.

Related Stories: