இந்தியாவுக்கு 110 கோடி கொரோனா நிதி உதவி: டிவிட்டர் வழங்கியது

வாஷிங்டன்: இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியாக 110 கோடியை டிவிட்டர் நிறுவனம் வழங்கி உள்ளது. கொரோனா 2வது அலையிலிருந்து மீள இந்தியாவுக்கு பல வெளிநாடுகளும், சர்வதேச நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியாக ₹110 கோடியை டிவிட்டர் நிறுவனம் வழங்கி உள்ளது. முன்னணி மைக்ரோபிளாகிங் நிறுவனமான டிவிட்டரின் சிஇஓ பேட்ரிக் டோர்சே இதனை நேற்று அறிவித்துள்ளார். இந்த நிதி உதவியை, வறுமையை ஒழிக்க சேவை செய்யும் கேர் மற்றும் சேவா இன்டர்நேஷனல், எய்டு இந்தியா ஆகிய 3 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக வழங்கியுள்ளது. கேர் அமைப்பிற்கு ₹73 கோடியும், மற்ற இரு அமைப்புகளுக்கு தலா ₹18.5 கோடியும் நிதி உதவி வழங்கி உள்ளது. இந்த நிதியின் மூலம் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் வழங்கப்படும் என டிவிட்டர் சிஇஓ கூறியுள்ளார்.

Related Stories: